×

சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக இறங்கி வருகின்றனர்.

அந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2ஆவது முறையாக உதயநிதி ஸ்டாலின் களமிறங்குகிறார். இந்நிலையிகள் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். சேப்பாக்கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு தாக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஜீப்பில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 2011ம் ஆண்டு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது.

2011 முதல் நடைபெற்ற 3 தேர்தல்களிலும் சேப்பாக்கம் தொகுதியில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. 2011, 2016ம் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜெ.அன்பழகன் வென்றார். 2021 தேர்தலில் 93,285 வாக்குகளைப் பெற்ற உதயநிதி ஸ்டாலின், 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலில் உதயநிதிதியை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலி 23,930 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதேபோல சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பாமகவின் திலகபாமா, பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

Tags : Udayanidhi ,Sepakkam ,Chennai ,Deputy ,Chief Minister ,Tamil Nadu ,Assembly ,Dimuka Coalition ,NDA Coalition ,Daveka ,Nam Tamil Party ,
× RELATED அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக...