மீனாட்சி கோயிலில் மாசிமக விழா கொடியேற்றம்

மதுரை, பிப்.19: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. கொரோனாவிற்கு பின்னர் கடந்த மாதம் தை திருநாளை முன்னிட்டு மாரியம்மன் தெப்பத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிழ்ச்சிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து மாசி மாதம் திருவிழாவை ஒட்டி நேற்று மீனாட்சியம்மன் கோயிலில் மாசிமக கொடியேற்றம் காலை 9.30 மணிக்கு மேல் நடந்தது. சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அலங்கார கோலத்தில் அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சித்திரை வீதிகளில் அம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடையுடன் வலம் வரும். மார்ச் 9ம் தேதி அன்று பிரதான கொடியிறக்கி கணக்கு வாசித்தல் நடைபெற்று உற்சவம் நிறைவடையும். மார்ச் 9ம் தேதி கணக்கு வாசித்தல் உள்ளதான நாட்களில் கோயில் சார்பாகவும், உபயமாகவும், மீனாட்சி அம்மனுக்கு உபய தங்கரதம் உலா மற்றும் உபய திருக்கல்யாணம் போன்ற விசேட நிகழ்ச்சிகள் பதிவு செய்து நடத்திட இயலாது என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோயில் ஊழியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Related Stories:

>