×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம், பிப்.19: திருப்பரங்குன்றம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மூலக்கரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முன்பு நேற்று இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் மற்றும் இனிப்புகள்,பிஸ்கட், தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். சாலை விதிகளை மதிக்காத நபர்களை வாகனத்தை நிறுத்தி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து அறிவுரை வழங்கினார். உடன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்ந்த ஸ்டாலின், பாரதி சேர்மன், அமுதா, தேவராஜ் அதிசயராஜ், உமா மகேஸ்வரி திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ் ராம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு