பழநி கோயில் கும்பாபிஷேக பணியை விரைவுபடுத்த கோரிக்கை

பழநி, பிப். 19: பழநியில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கௌரவ தலைவர் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் தலைமை வகித்தார். துணை தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். நகர தலைவர் மணிமுத்து, மாவட்ட பொது செயலாளர் ஹரிஹரசுப்பிரமணி, இந்து முன்னனி மாவட்ட பொது செயலாளர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பழநி நகரை புனித நகராக அறிவித்து தமிழக அரசு அதற்கான நிதியை ஒதுக்கிட வேண்டும். பழநி கோயில் கும்பாபிஷேக பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பழநி வழித்தடத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். பழநி கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>