பழநி வழித்தடத்தில்

பழநி, பிப். 19: பழநியில் செம்மொழி தமிழ்ச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, செயலாளர் செந்தில், பொருளாளர் சிவநேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பழநி நகர், புறநகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாவண்ணம் உள்ளாட்சி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணை செயலாளர் மணிகண்டன், ஆயிர வைசியர் சங்க நிர்வாகிகள் குமரவேல், வடிவேல், கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>