மாணவனை கடத்திய 6 பேர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த புதுநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் கணேசன் (17), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய கணேசனை காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றது. இதைப்பார்த்த அப்பகுதியினர் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் போலீசார் இதுபற்றி தெரிவித்தனர். அதன்பேரில், அச்சிறுப்பாக்கம் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கை நடத்திய போலீசார், சிறுவனை கடத்தி வந்த காரை மடக்கி பிடித்து, அவனை மீட்டனர். காரில் இருந்த 6 பேரை பிடித்து செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த பூபதி (26), மணிகண்டன் (24), சீனிவாசன் (25), ஆதித்யா நடராஜ் (26), சக்திவேல் (24), சந்தோஷ்குமார் (26) என்பதும், குடும்ப தகராறில் சிறுவனை புதுக்கோட்டைக்கு கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>