அகில இந்திய ஐஎன்டியுசி தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி பிறந்தநாள் விழா

ஸ்ரீபெரும்புதூர்: அகில இந்திய ஐஎன்டியுசி தலைவரும், முன்னாள் எம்பியுமான டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி ஜி 91வது பிறந்தநாள் விழா தாம்பரம் அருகே படப்பை ஹர்ஷா கார்டனில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஐஎன்டியுசி தலைவர் வி.ஆர்.ஜெகநாதன் தலைமை வகித்தார். செயல் தலைவர் கே.ஏ.மனோகரன், தமிழக செயல் தலைவரும் டிவிஎஸ் குழும தொழிற்சங்ககளின் தலைவர் ஆர்.குப்புசாமி, மூத்த துணைத் தலைவர் பி.கதிர்வேல், பொதுச் செயலாளர் கே.கே.களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும், கர்நாடகா எம்எல் ஏ ஆர்.தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக ஜி.சஞ்சீவரெட்டி ஜி கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார். நிர்வாகிகள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கபட்டன. விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பி.மனோகரன், காங்கிரஸ் மாநில எஸ்சி, எஸ்டி துறை தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Related Stories:

>