சிறுமியிடம் பாலியல் சில்மிஷம்: ஆசாமி கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஐஸ்வர்யம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவரது வீட்டின் அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். இதில், அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிட், தர் பாலியல்  தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமி, அப்பகுதி சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள். இதை பார்த்த ஸ்ரீதர், சிறுமியிடம் பாலியல் சிஷ்மிஷம் செய்துள்ளார். இதனால், சிறுமி வீட்டில் அழுது கொண்டே இருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறினாள். இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். எஸ்ஐ தேவிகா, நேற்று காலை ஸ்ரீதரை கைது செய்தார். பின்னர் அவர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories:

More
>