×

குளச்சல் நகராட்சி ஊழியர் தற்கொலை

குளச்சல், ஏப்.2: குளச்சல் அருகே சாஸ்தான் கரை நுள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஆன்லட் சகாய லிசி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் அருள்ராஜ் கடந்த 26ம் தேதி வீட்டில் விஷம் குடித்துவிட்டு மயங்கினார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற குளச்சல் போலீசார் அருள்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மனைவி ஆன்லட் சகாய லிசி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kulchal ,Municipality ,Arulraj ,Sasthan Karai Nullivilai ,Kulchal Municipality ,Anlat Sahay Lisi ,Arulraj… ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு