×

திருத்தணியில் மாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரமோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. பன்னிரன்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை  திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு  விநாயகர் திருவீதியுலாவுடன் துவங்கியது. நேற்று காலை  8:30-9:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது .முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது.

வரும், 24ம் தேதி மர தேர் திருவிழாவும், 25ம் தேதி வள்ளி திருமணம் நடக்கிறது.  இம்மாதம், 27ம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக எளிய முறையில், பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது. கொடியேற்றும் விழாவில்  கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruthani ,flag hoisting ceremony ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து