கடையநல்லூரில் பெண் கழுத்தறுத்து படுகொலை கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சி

கடையநல்லூர், பிப். 18: சிவகிரி அருகேயுள்ள மேலகரிசல்குளம் அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (51). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ராயகிரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாலா (35). இவருக்கு கணேசன் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். அந்தோணிராஜுக்கும், மாலாவுக்கும் பல நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருவரும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று காலை வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதிப் பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த புளியங்குடி டி.எஸ்.பி.சாமிநாதன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், எஸ்ஐ விஜயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அறைக்கதவை திறந்து பார்த்த போது அந்தோணிராஜ் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டு கிடந்த மாலாவின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை எஸ்பி சுகுணாசிங் பார்வையிட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனியார் விடுதியில் இரவில் அறை எடுத்து தங்கிய இருவருக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், மாலாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>