×

லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பெண்கள் பலி கூடுதல் நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்

கேடிசிநகர், பிப். 18: பாளை மணப்படை வீடு மற்றும் மணக்காட்டைச் சேர்ந்த பெண்கள் 31 பேர், மணியாச்சி மற்றும் புதியம்புத்தூருக்கு கூலி வேலைக்காக லோடு ஆட்டோவில் சென்ற போது, மணியாச்சியில் ஓடையில் கவிழ்ந்தது. இதில் மணப்படை வீடு பேச்சியம்மாள், ஈஸ்வரி, மலையழகு, மனோகரன் மனைவி பேச்சியம்மாள், கோமதி ஆகிய 5 பெண்கள் பலியாகினர். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் முதலமைச்சரின் ெபாது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி மணப்படை வீடு கிராமத்தில், பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு நேற்று (பிப்.17) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து மாலையில் 5 பேரின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Tags : Relatives ,women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...