×

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

நெல்லை, பிப். 18: நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க நிர்வாக குழு கூட்டம், தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் நடந்தது. செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். துணை தலைவர்கள் முகம்மது அனீபா, நாராயணன், கான் முகம்மது, துணை செயலாளர்கள் செய்யது அலி, ஜவகர், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல்ரகுமான், ஹக்கீம், மீரான்மைதீன், சாகுல்ஹமீது, நாராயணன், சம்சுதீன், ஐயப்பன், லட்சுமணன், ராஜேந்திரன், வீரவேல், மாரியப்பன், ராமச்சந்திரன், அருள்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும். மாநகர பகுதியில், கொரோனாவுக்கு முன்புபோல் இரவு அதிக நேரம் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். வணிகர்களின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாநகர பகுதிகளில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்து வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கம்பெனிகள் இரட்டை விலை கொள்கையை கைவிட வேண்டும். இதனை மத்திய- மாநில அரசுகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்யது அலி நன்றி கூறினார்.

Tags : Merchants Association ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...