×

பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

தஞ்சாவூர், ஏப்.1: பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பொது செலவின பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் செலவின பார்வையாளர் சஞ்சீவ் குமார் தாலுக்கா அலுவலகத்திற்கு வருகை புரிந்து தேர்தல் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக தஞ்சாவூர் கும்பகோணம் சாலை வங்காரம்பேட்டையில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரிகள் இந்த வழியாக சென்ற வாகனங்களை சோதனை செய்ததையும் செலவின பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது உடன் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் பாபநாசம் வட்டாட்சியர் சந்தனவேல், உதவி தொடர்பு அலுவலர் மணிகண்டன், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Tags : Papanasam Taluka Office ,Thanjavur ,Public Expenditure Observer ,Papanasam Assembly Constituency ,Sanjeev Kumar ,Taluka Office ,District ,Thanjavur Kumbakonam… ,
× RELATED பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை...