×

108 ஆம்புலன்ஸ் மூலம் 30 ஆயிரம் பேர் பலன்

திருப்பூர், ஜன. 18:  திருப்பூர் மாவட்டத்தில் ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 30 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் லிபின் ஜோஸ் கூறியதாவது: தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு முதல் இதனைப் பயன்படுத்தி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 30 ஆயிரத்து 578 பேர் இதன் மூலம் பயனடைந்தனர். இதில் சாலை விபத்துகளில் 5 ஆயிரத்து 168 பேரும், கொரோனா பாதிப்புடன் 3 ஆயிரத்து 460 பேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதே போல் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக ஏராளமானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவ்வாறாக பல்வேறு தேவைகளுக்கு என மொத்தம் 30 ஆயிரத்து 578 பேர் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

Tags :
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...