×

பாலக்காடு மாவட்டத்தில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பாலக்காடு, ஜன. 18:  பாலக்காடு மாவட்டத்தில் 9 முகாம்களில் 900 பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று முன்தினம் போடப்பட்டது.

பாலக்காடு மாவட்டத்தில் 9 முகாம்களில் 100 பேர் வீதம் மொத்தம் 900 பேருக்கு  சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பூசி போட்டனர். தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படுகிறது.

பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாரா, அகளி, அம்பலப்பாறை, நன்னியோடு, சாலிசேரி மற்றும் கொப்பம் ஆகிய சமுக சுகாதாரத்துறை மையங்கள், கோட்டப்பாடம் ஆரம்ப சுகாதாரத்துறை மையம், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை, மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவமனை ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 900 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 28 நாட்கள் பின்னர் 2வது கட்ட டோஸ் மருந்துகள் செலுத்தப்படவுள்ளது. கர்ப்பணி பெண்கள், 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை என டி.எம்.ஓ. ரீத்தா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,district ,Palakkad ,
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின