×

2ம் கட்டமாக 27 வேட்பாளர்கள்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

கோவை: கோவையில் புதிய தமிழகம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்களாக 27 பேர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று வெளியிட்டார். கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நே்றறு வெளியிட்டார். ஏற்கனவே முதல்கட்டமாக 43 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ேநற்று இரண்டாம் கட்டமாக 27 வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிட்டார்.

அதன்படி, ராஜபாளையம் தொகுதியில் வழக்கறிஞர் ரமாதேவி, சிவகாசியில் காளீஸ்வரி, அருப்புக்கோட்டை ரகுபதி, திருச்சுழி குணசேகரன், தூத்துக்குடி ரமேஷ், முதுகுளத்தூர் மலைச்செல்வம், திருவாடனை பாலுச்சாமி, திருவையாறு வேணு, தாராபுரம் சின்னசாமி, திண்டுக்கல் பிரதீப் பாண்டியன், ஆலங்குளம் உதயக்குமார், பெரம்பலூர் வெங்கடேசன், அந்தியூர் பெரியசாமி, பல்லாவரம் தங்கராஜ், ஆலந்தூர் வேலுச்சாமி, பழநி வாய்க்கால் துரை,

லால்குடி வழக்கறிஞர் இளஞ்செழியன், மணச்சநல்லூர் பாலு, ஸ்ரீரங்கம் நியூட்டன், திருச்சி மேற்கு சண்முகம், துறையூர் ராஜமாணிக்கம், கே.வி குப்பம் கந்தன், மடத்துக்குளம் செந்தில்குமார், அணைக்கட்டு ஜெயசீலன், திருப்பரங்குன்றம் சேதுராமன், நத்தம் விஜயக்குமார், திருச்சி கிழக்கு கவுசல்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 3ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்து உள்ளார்.

Tags : Krishnasamy ,Coimbatore ,Puthiya Tamil Nadu Party ,Kuniyamuthur ,
× RELATED பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்