×

நீலகிரியின் முதல் கலெக்டர் ஜான் சலீவனின் நினைவு தினம் அனுசரிப்பு

ஊட்டி, ஜன. 18: நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் ஜான் சலீவனின் 166வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் 1819ம் ஆண்டு நீலகிரியை கண்டறிந்தார். கன்னேரிமுக்கு கிராம பகுதியில் உள்ளூர் மக்களின் உதவியுடன் கற்களால் கட்டப்பட்ட பங்களாவை தனது அலுவலகமாகவும் ஜான் சல்லிவன் பயன்படுத்தி வந்தார். நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக இருந்து சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய அவர் ஊட்டி நகரம், ஊட்டி ஏரி ஆகியவற்றை உருவாக்கினார்.

இதுதவிர இங்கிலீஷ் காய்கறிகளையும், பணப்பயிர்களான தேயிலை, காபி, சின்கோனா உள்ளிட்டவற்றை முதலில் பயிரிட்டு விவசாயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதவிர சாலை மேம்பாடு போன்றவைகளும் இவரது பணி காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஜான் சலீவன் கடந்த 1855 ஜனவரி 16ம் தேதி மரணமடைந்தார்.

கன்னேரிமுக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு ஜான் சல்லிவன் நினைவகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட நகரங்களின் அரிய பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்கள், பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறைகள், அவர்களின் தயாரிப்புகள், புத்தகங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் ஜான் சலீவனின் 166வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சித் சிங் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : John Sullivan ,death ,Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...