தொழிலாளி மர்மச்சாவு

கோவை ஜன 18:  கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2 ஆண்டாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து  வந்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். ஒரு வாரம் முன்பே அவர் இறந்திருக்கலாம் என தெரிகிறது. தற்கொலை செய்து கொண்டாரா?, உடல்நலக் குறைபாடு காரணமாக இறந்துவிட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>