2 பேர் தற்கொலை

கோவை, ஜன.18:  கோவை சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் கணேசன் (41). லாரி டிரைவரான இவர் மது போதைக்கு அடிமையாக இருந்தார். நேற்று முன்தினம் இவர் தனது மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் செய்தார். பின்னர் இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (33). எலக்ட்ரீசியன் இவருக்கு 7 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. மதுப்பழக்கம், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை 7 மாதம் பிரிந்து வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டிற்கு சென்றார். அப்போது மது போதை விவகாரம் தொடர்பாக மனைவிக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் மகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>