மது விற்ற 4பேர் கைது

ஈரோடு, ஜன. 18: ஈரோடு சூரம்பட்டி நால் ரோடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று மது விற்றதாக கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (24) என்பவரையும், கிருஷ்ண தியேட்டர் பகுதியில் மது விற்ற வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த மாதேஸ்வரன் (36) என்பவரையும், சித்தோடு காந்தி நகர் பகுதியில் மது விற்றதாக நடுப்பாளையத்தை சேர்ந்த கதிர் என்ற கதிர்வேல் (32), சிவகிரி தாண்டாம்பாளையத்தில் மது விற்றதாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பத்மநாதன் (35) ஆகிய 4 பேரை கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஈரோடு வடக்கு, தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைப்பகுதியில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>