ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது

ஈரோடு, பிப். 18: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, வரும் மார்ச் மாதம் 28ம் தேதி குருத்தோலை ஞாயிறும், ஏப்.,1ம் தேதி புனித வியாழனும், ஏப்.,2ம் தேதி புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது. ஏப்.,4ம் தேதி ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் (தவம்) கடைபிடிப்பது வழக்கமாகும். இந்நிலையில், தவகாலம் நேற்று துவங்கப்பட்டதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆர்.சி, சிஎஸ்ஐ உள்ளிட்ட தேவாலயங்களில் சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், ஈரோடு புனித அமலஅன்னை தேவலாயத்தில் நடந்த சாம்பல் புதன் சிறப்பு வழிபாட்டில், பங்கு தந்தையும் ஈரோடு மாவட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர்,  துணை பங்கு தந்தை ஜான்சான் பிரதீப் அகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நேற்று காலை நடந்தது. கடந்த ஆண்டு வழங்கப்பட்டு குருத்தோலைகளை சுட்டு சாம்பல் செய்து, அதனை தேவலாயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தலை மீது சாம்பல் தூவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் சிலுவை வடிவில் கிறிஸ்தவர்கள் நெற்றியில் பூசுவது வழக்கம். நடப்பாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக தலை மீது சாம்பல் தூவப்பட்டது.

Related Stories:

>