- திமுக
- Thiruverumpur
- திருச்சி
- ஆண்டனிசாமி
- பாரதிபுரம், கூத்தியப்பர்
- திருச்சி மாவட்டம்
- ரஞ்சித் குமார்
- கூத்தியப்பர் நகர பஞ்சாயத்து
- திமுக…
திருவெறும்பூர்: திருச்சியில் திமுக கவுன்சிலரை வெட்டி கொலை செய்த 9 பேர் கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் பாரதிபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் ரஞ்சித்குமார்(38). கூத்ைதப்பார் பேரூராட்சி 11வது வார்டு திமுக கவுன்சிலர். கூத்தைப்பார் பேரூர் திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். திருவெறும்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வந்தார். இவர் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் சோழமாநகரில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் ரஞ்சித்குமார் நேற்றிரவு தனது தொழில் பார்ட்னரை சந்தித்துவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருவெறும்பூர் புதுத் தெரு அருகே நவல்பட்டு சாலையில் சென்றபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை வழி மறித்து கட்டையால் தாக்கி, பின்னர் அவரை அரிவாளால் உடல் முழுவதும் சரமாரி வெட்டியதுடன் தலைையை வெட்டி சிதைத்து படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டதில் மூன்று பைக்குகளில் 9 பேர் கொண்ட கும்பல் தான் இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 8 தனிப்படை அமைத்து 9 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
