×

நாகர்கோவில் அருகே அரசு நிலத்தை ஆக்ரமித்து வாழை, தென்னை தோட்டம் நில மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணை

நாகர்கோவில், பிப்.18 : நாகர்கோவில் அருகே பறக்கிங்கால் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து தோட்டம் அமைத்துள்ளவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். நாகர்கோவிலில் பழையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையான சபரி அணையில் இருந்து, பறக்கை குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் பறக்கை பாசன கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் சுமார் 6.400 கி.மீ. ஆகும். பல இடங்களில் இந்த கால்வாய் ஆக்ரமிக்கப்பட்டு வீடுகளாகவும், தோட்டங்களாகவும், தனியார் கட்டிடங்களாகவும் மாறி உள்ளன. கால்வாயில் கழிவு நீர் கலந்து சாக்கடையாகவும் ஒரு பகுதி மாறி விட்டது. இந்த நிலையில் சமீபத்தில் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாகர்கோவில்அருகே பறக்கை கால்வாய் கரையில் இருந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இவர்களுக்கு அஞ்சுகிராமம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு அமைக்கப்பட்டுள்ளது.

ஏழைகள் இருந்த வீடுகளை இடித்து நடவடிக்கை மேற்கொண்ட பொதுப்பணித்துறை நிர்வாகம், பறக்கை பாசன கால்வாய் பகுதியில் உள்ள மற்ற ஆக்ரமிப்புகளை அகற்ற வில்லை. குறிப்பாக செல்வந்தர்கள், வசதி படைத்தவர்கள் பாசன கால்வாய் பகுதிகளை ஆக்ரமித்து வாழைத் தோட்டம், தென்னந்தோப்புகள் வைத்து மாதந்தோறும் பல லட்சம் சம்பாதித்து வருவதாகவும், இதில் பொதுப்பணித்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பறக்கை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான  பறக்கை கண்டேன்குளம், பறக்கிங்கால் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்ரமித்து வாழை, தென்னந்ேதாப்புகள் நடத்தி வருபவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட கலெக்டர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்கள் சென்றன.

இதன் அடிப்படையில் நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை நேரில் அழைத்து விசாரணை தொடங்கி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலை புறம்போக்கு ஆக்ரமிக்கப்பட்டு இருந்தால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர். பொதுப்பணித்துறை மவுனம் இந்த பிரச்னை தொடர்பாக பொதுப்பணித்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நீர் நிலை ஆக்ரமிப்புகளை தனியார்களிடம் இருந்து மீட்கும் வகையில் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள். தனிப்பட்ட நபர் மற்றும் அமைப்புகளின் புகாரின் பெயரால்  நடவடிக்கை எடுப்பதை விட, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக  நடவடிக்கையில் இறங்கி புகார் அளித்து ஆக்ரமிப்பாளர்களின் பிடியில்  இருந்து நிலங்களை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : coconut plantation land fraud unit police investigation ,government land ,Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு