குமரி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 170 போலீசார் அதிரடி இடமாற்றம் எஸ்.பி. உத்தரவு

நாகர்கோவில்,பிப்.18: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் எதிரொலியாக சொந்த மாவட்டங்களில் பணியில் இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுமார் 92 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டிஐஜி பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். தற்போது குமரி மாவட்டத்தில் சொந்த தாலுகா மற்றும் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருந்த தலைமை காவலர்கள், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் என சுமார் 170 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவை எஸ்.பி.பத்ரி நாராயணன் பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>