2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும் மின் மயானத்தில் தகனம் உறவினர்கள் கதறல்

நாகர்கோவில், பிப்.18: ஈத்தாமொழி அருகே இறந்துபோன ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்களும், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள சுண்டபற்றிவிளை கோயில் தெருவில் வசித்து வந்தவர் கண்ணன் (43). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (37). இவர்களுக்கு, அனுஷ்கா (11) என்ற மகளும், விவாஸ் (4) என்ற மகனும் உண்டு. 2 வது மகன் விவாசுக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. பல மருத்துவமனைகளில் காண்பித்தும் வலிப்பு நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த கண்ணன், சரஸ்வதி ஆகியோர், கடந்த 15ம் தேதி இரவு தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தாங்களும் அடுத்தடுத்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.

 ஈத்தாமொழி போலீசார் சென்று நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நடந்த சோதனையில் கண்ணன், சரஸ்வதி எழுதி இருந்த உருக்கமான கடிதமும் சிக்கியது. நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று காலை நால்வரின் உடல்களையும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்கள் நாகர்கோவில் புளியடியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நால்வரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. குழந்தைக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால், ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>