அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி க்ரைம் செய்திகள் கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவக்கம் சட்ட தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி, பிப். 18: திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்டத்தில் இயங்கும் லால்குடி, மணப்பாறை, முசிறி, துறையூர் வடட சட்டப்பணிகள் குழுக்களுக்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தன்னார்வ தொண்டர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வ தொண்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆசிரியர்கள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உட்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமகன், எம்எஸ்டபிள்யூ பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் (வக்கீலாக பதிவு செய்யும் வரை), சமூக சேவை புரியும் சமூக ஆர்வலர்கள் (அரசியல் அமைப்புசாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள்), மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள் ஆகிய பிரிவினர்களின் சட்ட தன்னார்வ தொண்டராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பங்களை அருகில் உள்ள நீதிமன்றங்களில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு குழுக்களில் பெற்று பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், தேர்வு செய்யப்படாதவர்களின் விவரம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களின் விவரம் திருச்சி மாவட்ட நீதிமன்ற https//districtsecourtsgov.in/tiruchirappalli என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். மேலும் பணிக்கு மதிப்பூதியம் தவிர சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. பணியில் இணையும் நபர்களது பணியை தன்னார்வலர்களாக மட்டுமே கருதப்படும். நிரந்தர பணி என கருத இயலாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் குழு (அ) சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More