×

திருச்சி மாவட்டத்தில் 15 நாட்களில்

திருச்சி, பிப். 18: திருச்சி மாவட்டத்தில் 15 நாட்களில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 57 பேர் மீட்கப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், காணாமல்போன குழந்தைகள், யாசகம் பெறும் குழந்தைகள் மற்றும் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகளை ஆபரேஷன் ஸ்மைல் என்ற சிறப்பு குழு மூலம் மீட்டு அந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு அளிக்க திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராம் உத்தரவின்பேரில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா முன்னிலையில் செயல்படுத்தப்படுகிறது.

அதில் திருச்சி மாவட்ட எஸ்பி ஜெயசந்திரன் மேற்பார்வையில் திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் தலைமையில் அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குனர் பிரபு,  பவுண்டேசன் இயக்குனர் கிருஷ்ணா, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அஷரப், குழந்தை தொழிலாளர் திட்ட மேலாளர் கவுதம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். இதில் 36 குழந்தை தொழிலாளர்கள், யாசகம் பெறும் 5 குழந்தை தொழிலாளர்கள், 4 குழந்தையை வைத்து யாசகம் எடுத்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள், 8 குழந்தை திருமணங்கள் மற்றும் 4 காணாமல்போன குழந்தைகள் என 57 குழந்தைகளை மீட்டு திருச்சி கலையரங்கம் திரையரங்க வளாகத்தில் உள்ள குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

Tags : Trichy ,district ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...