×

ரேஷன் கடைக்கு வந்த லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம் குழந்தை தொழிலாளர் உட்பட 57 பேர் மீட்பு 20 பவுன் நகை கொள்ளையடித்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருவெறும்பூர், பிப். 18: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து பாபா அட்டாமிக் நீக்குளியல் ஆராய்ச்சி மையத்துக்கு தேவையான தளவாட பொருட்கள் தயாரித்து அனுப்பப்படுகிறது. அதற்காக அந்த ஆராய்ச்சி மைய ஊழியர் ஹரிபாஸ்கர், பெல் குடியிருப்பில் தங்கி தர ஆய்வு மேற்கொண்டு வந்தார். கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி அவரது வீட்டிலிருந்து 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெல் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த டிசம்பர் 31ம் தேதி துவாக்குடி அண்ணா வளைவு பெரியார் திடலை சேர்ந்த நடராஜன் மகன் சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார் (21), வாழவந்தான் கோட்டை புதுகோயில் தெருவை சேர்ந்த நாகராஜ் (எ) பூனை நாகராஜ் (47) ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சந்தோஷ்குமார், பூனை நாகராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். அதன்பேரில் குண்டர் சட்டத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : child laborers ,ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா