விபத்தில் பலியான சிறப்பு எஸ்ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீட்டு தொகை மத்திய மண்டல ஐஜி வழங்கினார்

திருச்சி, பிப். 18: பெல் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ ஜெயக்குமார் கடந்த நவம்பர் மாதம் விபத்தில் பலியானார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவருடைய குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர காவல்துறை தலைவர் முயற்சி செய்தார். அதன்படி திருச்சி காமராஜபுரம் எஸ்பிஐ வங்கி கிளை மூலம் காவலர்களுக்கான வங்கி கணக்கில் வழங்கப்படும் ரூ.30 லட்சத்துக்கான காப்பீட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில் நடந்த விழாவில் பலியான சிறப்பு எஸ்ஐ குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை மத்திய மண்டல ஐஜி ஜெயராம் நேற்று வழங்கினார். குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரி மன்னன் உடனிருந்தார்.

Related Stories:

>