புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அதிமுகவில் ஐக்கியம்

திருச்சி, பிப். 18: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரியமங்கலம் பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்ற பகுதி செயலாளர் அம்மாசி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் விழா நடந்தது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில் தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராஜமணிகண்டன் மற்றும் வட்ட செயலாளர் ரவி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட அணி செயலாளர்கள் பாஸ்கர், விடிஎம் அருண் நேரு, செல்வமேரி ஜார்ஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>