மாவட்ட முதன்மை நீதிபதி அழைப்பு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவெறும்பூர், பிப். 18: திருவானைக்கோவில் அருகே உள்ள உத்தமர்சீலி அரசு உயர்நிலைப்பள்ளியில் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களிடம் மது மற்றும் பிற தீய பழக்கங்களின் தீமைகள் மற்றும் அதனிடமிருந்து விடுபடுதல் குறித்து மனநல ஆலோசகர் தினேஷ் பேசினார். மேலும் காஜாமலை மகளிர் மையத்தில் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு அளிக்கப்படும் இலவச சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.

Related Stories:

>