×

சாமானிய மக்களின் குரல்வளையை நெரிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்

மன்னார்குடி, பிப்.18: மன்னை தொகுதிக்குட்பட்ட நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் இளையராஜா, இந்திரஜித் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி நகர திமுக அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து, நகர திமுக செயலாளர் வீராகணேசன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், துணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாந்தி, மதி முத்துக்குமார், சட்ட ஆலோசகர் வக்கீல்கள் வீரக்குமார், நடேஷ் ஆகியோர் பேசினர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ டிஆர்பி ராஜா பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை உரிய ஆதாரங்களோடு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்தரப்பு நபர்களின் கருத்துக்களுக்கு கண்ணியமான முறையில் பதில் அளிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் அதிகார துஷ்ப்பிரயோகங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் வெளிக்கொண்டு வரும் பணிகளில் இளைஞர்கள் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத 3 வேளாண் தீராத சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி அறவழி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வங்கி கடன் மற்றும் நகை கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சாமானிய மக்களின் குரல்வளையை நெரிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனபன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நகர ஒருங்கணைப்பாளர் பாலகுமரன் வரவேற்றார். வட்ட ஒருங் கிணைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...