திமுக தகவல் தொழில்நுட்ப அணி வலியுறுத்தல் சாலை மறியல் அறிவிப்பு எதிரொலி அரியலூர் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருத்துறைப்பூண்டி 6வது வார்டு அரியலூர் கிராமத்தில் கஜா புயலுக்கு பிறகு நீண்ட நாட்களாக நகராட்சி மூலம் கிடைக்க வேண்டிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வந்தனர். இதன் காரணமாக நகராட்சியை கண்டித்து இந்திய கம்யூ., கிளை கிராம சங்கம், கிராம பொதுமக்கள் சார்பில் அரியலூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்க வேண்டும். சாலை சீரமைக்க வேண்டும். தெருவிளக்கு பராமரிப்பு முறையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் முத்துக்குமரன், நகர செயலாளர் முருகேசன், கிராம கமிட்டி தலைவர் கலைமணி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தற்போது குடிநீர் வழங்க பணி நடைபெறுகிறது. சாலை பணியும் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர். இதனால் அறிவித்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கபடுகிறது என்று மாவட்ட குழு உறுப்பினர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

Related Stories:

>