×

பாபநாசம் ரெகுநாதபுரத்தில் அபாய நிலையில் கால்நடை மருந்தகம்

பாபநாசம், பிப். 18: கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கால்நடை கிளை நிலைய கட்டிடம் உள்ளது. இது பாபநாசம் கால்நடை மருந்தக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆய்வாளர் மட்டுமே பணியில் இருப்பார். இந்த கட்டிமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று அம்பலக்கார தெருவில் சுகாதார வளாகம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தையும் இடித்து விட்டு புதிதாக கட்டவும் கோரிக்கை விடப் பட்டுள்ளது.

Tags : Papanasam Regunathapuram ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...