கிறிஸ்தவ தேவாலயங்களில் 40 நாட்கள் தவக்காலம் துவக்கம்

கும்பகோணம், பிப்.18: இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கின்றனர்.கும்பகோணம் பகுதியிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் நேற்று 40 நாட்கள் தவக்காலம் தொடங்கியது. அதையொட்டி நேற்று சாம்பல் புதன் அனுசரி க்கப்பட்டது. கும்பகோணத்தில் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் மற்றும் கும்பகோணம் 4 ரோடு பகுதியில் உள்ள புனிய அந்தோனியர் திருத்தலம் ஆகியவற்றில் நேற்று ஆயர்சாமி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து எரித்து சாம்பல் ஆக்கப்பட்டதை புனிதப்படுத்தினார். பின்னர் பாதிரியார்களுக்கு நெற்றியில் பூசி சாம்பல் புதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அருட்தந்தைகள் மற்றும் அருட்சகோதரிகள் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினார். அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் திருச்சபைகளில் நேற்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>