×

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசிமக விழா கொடியேற்றம்

கும்பகோணம், பிப்.18: கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசிமக பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழா பந்தல் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அனைத்து சுவாமி, அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினர். அப்போது வேத பாராயணம், திருமுறைகள், சிறப்பு நாதஸ்வரம் முழங்க விழா கொடியேற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நேற்றிரவு அதிகும்பேஸ்வரர் கோயிலில் 10 நாதஸ்வர, மேள கலைஞர்களின் இன்னிசை முழக்கத்துடன் பஞ்சமூர்த்தி சுவாமிகள் இந்திர விமானத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

Tags : Flag hoisting ceremony ,Adikumbeswarar Temple ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...