வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கும்பகோணம், பிப்.18: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம் துலக்கவேலி பகுதியை சேர்ந்தவர் நஜீர்அகமது(48). இவரது குடும்பத்தினனர் கடந்த 15ம்தேதி அன்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்க வெளியூர் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் காலை அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்ட அப்பகுதியினர் நஜீர் அகமதுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த நஜீர் அகமது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரும்பு பீரோவை திறந்து 18 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வௌ்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சோழபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>