அறந்தாங்கி அருகே வைரிவயலில் குதிரை, மாட்டுவண்டி எல்கைப்பந்தயம்

அறந்தாங்கி, பிப்18: அறந்தாங்கியை அடுத்த வைரிவயல் வீரமுனியாண்டவர் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு, 81ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, கரிச்சான்மாடு,நடுமாடு, பூஞ்சிட்டு மாடு என மாடுகளுக்கு 4 பிரிவாகவும், நடுகுதிரை, கரிச்சான்குதிரை, பூஞ்சிட்டு குதிரை என குதிரை வண்டிக்கு 3பிரிவாக பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடு, குதிரைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள் பந்தயத்தை கண்டுகளித்தனர்.

Related Stories:

>