பொன்னமராவதி அருகே தூத்தூர், கண்டியாநத்தம் பகுதியில் பேருந்து வசதியின்றி மக்கள் அவதி

பொன்னமராவதி,பிப்.18: பொன்னமராவதி அருகே பேருந்துகள் சென்று வராத கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி அருகே தூத்தூர் வழியாக சென்று வந்த பேருந்துகள் கடந்த 4வருடத்திற்கு முன் நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இயக்கப்படவில்லை. இதே போல கண்டியாநத்தம் கிராமத்திற்கு துவரங்குறிச்சி மற்றும் புழுதிபட்டிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக துவரங்குறிச்சிக்கு சென்று வந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. புழுதிபட்டிக்கு சென்று வந்த டவுன்பஸ் கொரோனோ காலத்தில் நிறுத்தப்பட்டது. இதுவரை இயக்கப்படவில்லை. இவ்வழியாகச்சென்ற மினிபேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கொன்னையம்பட்டிக்கு ஒரே ஒரு மினிபஸ் மட்டும் சென்று வந்தது. அதுவும் செல்வதில்லை. ஆலம்பட்டிக்கு பேருந்து வசதியே கிடையாது. இந்த காலத்திலும் பேருந்துகள் செல்லா கிராமங்களும் இருக்கின்றது என்றால் இது இந்த பகுதி தான் என்பது உண்மை. எனவே பேருந்து வசதியில்லாத தூத்தூர், கண்டியாநத்தம், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து வசதியின்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>