×

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் பிரசாரம் துவக்கம்; திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்

 

திருவாரூர்: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் பிரசாரத்தை துவக்குகிறார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியது.
இந்நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (31ம் தேதி) முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். நாளை மாலை 5 மணியளவில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர் தெற்கு ரத வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

அன்று மாலை அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் ராயனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். 2ம் தேதி காலை 9 மணிக்கு பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு, பவானி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு சித்தோடில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், அன்று மாலை 5 மணிக்கு சூலூர், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதி வேட்பாளரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

 

Tags : Principal ,M.U. K. Stalin ,Thiruvaroor ,Dimuka ,Thiruvarur ,Mu Thackeray ,Coalition Party ,K. Stalin ,Tamil Nadu Assembly General Election ,Congress ,BJP ,
× RELATED தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கூட...