×

தா.பழூர் கடைவீதி இறைச்சி, மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தா.பழூர், பிப்.18: அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், ஊராட்சி தலைவர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தா.பழூர் பகுதிகளில் செயல்படும் ஆட்டிறைச்சி, கோழிக்கறி கடைகள், மீன் கடைகள் மற்றும் பன்றி இறைச்சி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாள்பட்ட, வியாதியுற்ற மற்றும் ஏற்கனவே இறந்த ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது, சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள், இறைச்சி கழிவுகளை திறந்த வெளியில் வீசி எறியும் அவலம், இறைச்சியை தொங்கவிட பயன்படுத்தப்படும் துருப்\பிடித்த இரும்பு கொக்கிகள், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமல் செயல்படும் இறைச்சி கடைகள் ஆகியவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 3 கிலோ மற்றும் பழைய சமைக்கப்பட்ட இறைச்சி 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இது போன்ற ஆய்வு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : fish shops ,Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!