×

தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கூட வாங்க முடியாத பால்வாடி கட்சிதான் தவெக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்

 

சென்னை: தேர்தல் பிரசாரத்துக்கு முறையாக அனுமதிகூட வாங்க முடியாத பால்வாடி கட்சிதான் தமிழக வெற்றிக் கழகம் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், துறைமுகம், எழும்பூர் மற்றும் திருவிக. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்ட தேர்தல் பணிமனைகள் திறப்பு விழா நடைபெற்றது. வால்டாக்ஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் மேற்கு பகுதி தேர்தல் பணிமனை, கொண்டிதோப்பு 54, 54 ‘அ’ வட்ட தேர்தல் பணிமனைகள் மற்றும் சவுகார்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள 57, 57 ‘அ’ வட்டத் தேர்தல் பணிமனைகளை சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார். விழாவில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதன்பின்னர் நிருபர்களிடம் சேகர்பாபு கூறும்போது, ‘’திமுக ஆட்சியில் இருந்தால் மட்டுமல்ல ஆட்சியில் இல்லாமல் இருந்தாலும் சரி மக்களோடு இரண்டற பயணிப்பவர்கள். களம் யாருக்கு சாதகமாக உள்ளது என்று நீங்களே தெரிந்துகொள்ளலாம்’ என்றார்.

லேப்டாப் விவகாரம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று எடப்பாடி கூறியுள்ளாரே? தான் திருடி பிறரை நம்பா என்ற வார்த்தையைதான் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்ல வேண்டும். கிழிந்த துணியை தைத்ததுபோல் திமுக கூட்டணி உள்ளது என்று விஜய் கூறியுள்ளாரே? கூவி, கூவி மற்ற கூட்டணி கட்சிகளை அழைத்து யாரும் வராததால் திமுகவை விஜய் விமர்சனம் செய்ய தான் செய்வார். செங்கோட்டையன் எப்படிப்பட்ட ஜாம்பவான். விஜய்க்கு பாடிகாட்டாக செல்லும் நிலையில் புலம்பி வருகிறார். விஜயின் பெரம்பூரில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே? தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி எப்படி வாங்கவேண்டும் என்று தெரியாத பால்வாடி கட்சி. அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அதன் பின் சித்தப்பா என்று அழைத்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.

 

Tags : Daveka ,Balwadi Party ,Minister ,B. K. Sekarbaba ,Chennai ,Sekarbabu ,Tamil Nadu Victory Club ,East District Dimuka, Port, Rampur ,Thiruvika ,Nagar Assembly Constituency ,
× RELATED காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி...