×

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா

ஜெயங்கொண்டம், பிப்.18: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையொட்டி இக்கோயிலில் நேற்று காலை கொடி ஏற்றப்பட்டு பிரகன்நாயகி பிரகதீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மாவு, திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், பால், தயிர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. தினந்தோறும் சுவாமிகளுக்கு அபிஷேகம், வீதி உலாவும் நடைபெற உள்ளது. வரும் 25ம் தேதியன்று திருத்தேர் வீதி உலாவும், 26ம் தேதியன்று தீர்த்தவாரியும், மாலை கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாக்காலங்களில் வேத பாராயணம், சொற்பொழிவுகள், நாதஸ்வர கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுவினர், இந்து சமய அறநிலையத் துறையினர், அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Gangaikonda Cholapuram Brihadeeswarar Temple Mass Pramorsava Festival ,
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...