×

கலெக்டர் அலுவலகத்தில் மினி கிளினிக் செவிலியர் பணியிடத்துக்கு நேர்காணல்

பெரம்பலூர்,பிப்.18:மினி கிளினிக் செவிலியர் பணியிடங்களுக்கான நேர்காணல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 16 பணியிட ங்களுக்கு 147 பேர் குவிந்தனர். தமிழக அரசால் புதிதாக அறிவித்து செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிவதற்கான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 16 மினி கிளீனிக்குகளுக்கு தகுதியானோர் வி ண்ணப்பிக்க கோரப்பட்டிருந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட அளவில் 147 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் தகுதியானோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2வது தளத்திலுள்ள விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கம் ஆகியவற்றில் நடைபெற்றன. முன்னதாக விவசாயிகள் குறைதீ ர்க்கும் கூட்டரங்கில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து முடிந்தபிறகு, மாவட் ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதாராணி தலைமையில் நேர்காணல்கள் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் ஊ தியமாக வழங்கப்படவுள்ளது. கடந்த 16ம்தேதி மருத்துவ அலுவலர் பணியிடங்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்டது. இன்று (18ம் தேதி) பல்நோக்கு சுகாதார பணியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்படுகிறது.

Tags : Mini Clinic Nurse Workplace ,Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...