×

பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் பணி

பெரம்பலூர்,பிப்.18: பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கை பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு காலமுறை ஊதியம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டிற்கு சட்ட மன்றத்தில் சிறப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். வெளிப்படையான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள், மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கோரிக்கைகள் அச்சிடப்பட்ட பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு செவிமடுக்காத பட்சத்தில், வரும் 28ம் தேதி சென்னையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது என அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Government doctors ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...