×

அலுவலகங்கள் வெறிச்சோடின பெரம்பலூரில் 12 தேவாலயங்களில் தவக்காலம் துவக்க சிறப்பு வழிபாடு

பெரம்பலூர், பிப்.18: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்று (17ம்தேதி) தொடங்கியது. கிறிஸ்து இயேசு பூமியில் அவதரித்து, உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவை சுமந்து, கல்வாரி மலையில் உயிர்நீத்து, 3ம் நாள் உயிர்த்தெழுந்தார். இதன்நினைவாக இயேசுவின் பாடுகளை நினைவுபடுத்தும் 40 நாள் தவக்காலம் உலகெங்கிலும் நேற்று (17ம் தேதி) தொடங்கியது. இத னையொட்டி மண்ணிலிரு ந்து பிறந்த மனிதன் மண்ணுக்கே செல்வான் என்பதை உணர்த்தும் விதமாக, கிறிஸ்தவர்களின் நெற்றியில், சாம்பலில் சிலுவை அடையாளம் இடுகின்ற “சாம்பல் புதன்” நேற்று தேவாலயங்களில் கடைபிடிக்கப் பட்டது.

இதன்படி பெரம்பலூர் புனித பனிமயமாதா தேவாலயத்தில் மறைவட்ட முதன் மைகுரு ராஜ மாணிக்கம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது. அதேபோல் பாளையம், அன்னமங்கலம், தொண்ட மாந்துறை, நூத்தப்பூர், பாத்திமாபுரம், திருவாளந்துறை, திருமாந்துறை, வடக்கலூர், பெருமத்தூர், எறையூர், பாடாலூர் ஆகிய 12 இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்குகுருக்கள் தலைமையில் சிறப்புத் திரு ப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து வெள்ளிக் கிழமைதோறும் தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிக ழ்ச்சிகள் நடைபெறும். முடிவில் புனித வாரத்தின் நிகழ்வாக மார்ச் 28 ம்தேதி குருத்து ஞாயிறு, ஏப்.1ம்தேதி பெரிய வியாழன், 2ம்தேதி பெரிய வெள்ளி, 4ம்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : churches ,Lent ,Perambalur ,offices ,
× RELATED புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ...