உலக அமைதி வேண்டி பாதயாத்திரை செல்லும் தம்பதிக்கு பெரம்பலூரில் காங்கிரசார் வரவேற்பு

பெரம்பலூர், பிப்.18: உலக அமைதி வேண்டி 650 கி.மீ. பாதயாத்திரை செல்லும் தம்பதிக்கு பெரம்பலூரில் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். காந்தியின் 73வது ஆண்டு நினைவாக, உலக அமைதி வேண்டி மதுரையைச் சேர்ந்த தம்பதியினரான கருப்பையா, சித்ரா ஆகியோர் கடந்த மாதம் ஜன.1ம் தேதி திருப்பூரில் தொடங்கி மார்ச் 12ம்தேதி வரை 41 நாட்களில், 650 கி.மீ. தூரத்திற்கு பயணித்து சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்ய உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை திருச்சி மாவட்டம் டோல்கேட், சமயபுரம், பாடாலூர், சிறுவாச்சூர் வழியாக பெரம்பலூர் வந்த தம்பதியினருக்கு தீரன்நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், மும்மூர்த்தி, சேவாதள சங்கத்தின் செயலாளர் மகேஸ்வரன், காங். ஓபிசி அணி மாவட்டத் தலைவர் சாமிதுரை, ஊடக பிரிவு செந்தில்பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டு வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: