*அரசு மருத்துவமனை டாக்டர் தகவல்
மன்னார்குடி : சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். கோடை வெப்பம் காரணமாக அதிக வியர்வை, உடலில் உப்பு சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை, அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற் றல், குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம் உள்ளி ட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கோடை காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவித்த தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள குழந்தை களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு பொதுவாகவே வாந்தி மயக்கம் இருக்கும். மழைக்காலங் களில் வாந்தி இருந்தாலும் உடலில் உள்ள நீர்ச்சத்தை கொண்டு தேகம் அதனை சமன்படுத்திக் கொள்ளும். ஆனால், கோடை காலங் களில் வியர்வை மூலம் நீர் சத்து அதிகம் வெளியேறினால் சோர்வு ஏற்படுவதுடன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்.
எனவே, அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த சூழலில் கர்ப்பிணி மற்றும் பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள் கோடையை சமாளிப்பது எப்படி என்பது குறித்து மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவர். குழந்தைகள் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரிமளா பிரபாகரன் தெரிவித்ததாவது:
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படும். இதனால், கர்ப்பப்பையில் உள்ள நீரின் அளவு குறையவும், சிறுநீர் தொற்று தண்ணீர் சேர்த்து குறைவதனால் சோர்வு போன்றவை அதிக ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பிணி தாய்மார்கள் வெயில் நேரத்தில் மிகவும் சோர்ந்து காணப்படுவார்கள். இந்த காலங்களில் அவர்களுக்கு அம்மை போன்ற தொற்று நோய்கள் அதிகம் ஏற்படுவதோடு குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வெயில் காலங்களில் கர்ப்பிணி தாய்மார்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை நேரடியாகவோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிடுவது நல்லது.
முக்கியமாக கோடை காலங்களில் வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) வர அதிகம் வாய்ப்பு உள்ளது. வெயில் நேரத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டம் உள்ள பகுதிகளில் வசிப்பது நல்லது.
குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் அம்மை வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகளுக்கு இந்த தொற்றுகள் வராமல் சுகாதாரமான அறைகளில் அல்லது வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பது நல்லது.
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் வீடுகளில் சமைக்கும் இட்லி, இடியாப்பம். நல்ல வேகவைத்த சாதத்தில் உருளைக்கிழங்கு, நெய் போன்றவற்றை வீட்டு பிசைந்து கொடுப்பது நல்லது.
ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் ஜூஸ் போன்ற பொருட்களை அதிகம் கொடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு நோய் தொற்று வராமல் சிறு சிறு உபாதைகள் இருந்தாலும் உடனே அரசு மருத் துவ மனைக்கு அழைத்து வந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

