×

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் துவங்கியது


நாகை, பிப்.18: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் நேற்ற சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான நேற்று சாம்பல் புதன் தொடங்கியது. இதை முன்னிட்டு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசப்படும் விபூதி கொரானா பரவல் காரணமாக நேற்று கைகளிலும், தலையில் சாம்பல் தூவப்பட்டு 40 நாள் தவக்காலத்தை உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தொடங்கி வைத்தார்.

Tags : Tiruppalli Christians ,Lent ,Velankanni Cathedral ,
× RELATED புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி